‘மாநகரம்’, ‘கைதி’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது மூன்றாவது படத்தில் விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்றதால் கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். மேலும், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் உலா வருவதால் லோகேஷ் கனகராஜின் மவுசு கோலிவுட்டில் அதிகரித்திருக்கிறது.
இருந்தாலும், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம், இன்னும் உறுதியாகமல் இருப்பதோடு, அந்த படம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லுவதற்கான எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருப்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்த லோகேஷுக்கு ‘மாஸ்டர்’ படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில், ‘கைதி’ வெளியாகி பெரிய வெற்றி பெற்றதால் ஒரு கோடிய உயர்த்தி ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
தற்போது ‘மாஸ்டர்’ படம் முடிவடைந்திருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் தயாரிக்க பலர் விருப்பம் தெரிவித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, அவர் சம்பளமாக ரூ.15 கோடி கேட்டாராம். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்தால், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கலாம். அவர்கள் இல்லாமல் பிற நடிகர்கள் நடித்தால், லோகேஷ் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வாய்ப்பே இல்லை, என்பதால், அவரிடம் சென்ற சில தயாரிப்பாளர்கள் பின் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...