முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் வார்த்தையால் மோதிக்கொண்டாலும், சம்மந்தப்பட்ட நடிகர்கள் என்னவோ நட்பாகத்தான் பழகி வருவார்கள். ஆனால், இதில் சில நடிகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் எலியும் பூனையுமாக முகத்தை திருப்பிக் கொள்வதும் உண்டு. அதில் இருவர் தான் சூர்யா -விக்ரம். என்னவோ சில காரணங்களுக்காக இந்த இருவரும் எலியும் பூனையுமாகத்தான் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், இவர்கள் இருவருக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் நடித்திருக்கும் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நயந்தராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்கெட்ச்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஞானவேல்ராஜவும், தாணுவும் எதிர் எதிர் அணியில் போட்டியிட்ட நிலையில், தற்போது தங்களது படங்கள் மூலமாகவும் போட்டி போட, அதே சமயம் சூர்யா - விக்ரம் இடையிலும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பொருத்திருந்து பார்ப்போம் அறிவித்தது போல இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையன்று தோதிக்கொள்கிறதா என்று...!
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...