Latest News :

பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலம் சொல்லிய மன்சூரலிகான்
Wednesday April-22 2020

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக மட்டும் இன்றி, ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராக திகழும் மன்சூரலிகான், அரசியலில் ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு சமூக பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

 

இன்று சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அதில் இருந்து நாம் பூமியை காக்க வேண்டும், என்றால் என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்றதோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ‘பூதாளம்’ என்ற குறும்படத்தை யுடியுப் தளத்தில் நடிகர் மன்சூரலிகான் வெளியிட்டுள்ளார்.

 

தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியதோடு, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மன்சூரலிகான் நடித்திருக்கும் ‘பூதாளம்’ குறும்படம், பூமி எப்படி இயங்குகிறது என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிய முறையில் விவரிப்பதோடு, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

 

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினையில், எத்தனை கோடி பணம் வைத்திருந்தாலும் அவர்களின் முதல் தேவையான காய்கறிகளும், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மட்டுமே இருக்க, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதற்கான இடமும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெருகிறது, என்பதை நாட்டு மக்கள் தற்போது ஓரளவு புரிந்திருக்கும் நிலையில், மன்சூரலிகானின் ‘பூதாளம்’ குறும்படம் விவசாய நிலங்களை அழித்து அப்பார்மெண்ட்கள் கட்டும் வியாபாரிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக போகும் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் சாட்டையடியையும் கொடுத்திருக்கிறது.

 

மொத்தத்தில் உலகமே கொண்டாடும் பூமி தினமான இன்று வெறும் வாழ்த்துகள் சொல்வதோடு நின்றுவிடாமல், பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு மனிதரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் நடிகர் மன்சூரலிகான் தயாரித்து, இயக்கி நடித்து வெளியிட்டிருக்கும் இந்த ‘பூதாளம்’ குறும்படம் ஆபத்தை அறியா மக்களுக்கான எச்சரிக்கையாக இருக்கிறது.

 

 

 

Related News

6461

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery