Latest News :

எம்.ஜி.ஆர், சிவாஜி மூலம் விழிப்புணர்வு! - ‘உதிர்’ படக்குழுவின் அசத்தலான கொரோனா பாடல்கள்
Thursday April-23 2020

கொரோனா பாதிப்பு மற்றும் அதில் இருந்து தங்களை காத்துக் கொள்வது எப்படி, என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘உயிர்’ படத்தை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் ஞான ஆரோக்கிய ராஜா, வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ள இருக்கும் விழிப்புணர்வு பணிகளுக்கான அனுமதிக்காக காத்திருக்கும் ஞான ஆரோக்கிய ராஜா, அதற்கு முன்பு பாடல்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறார்.

 

அதற்காக எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களின் பாடல்களின் மெட்டுக்களுக்கு, சொந்தமாக வரிகள் எழுதி, அதற்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்.

 

‘மகாதேவி’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடும் “தாயத்து...தாயத்த...” என்ற பாடல் மெட்டுக்கு “ஆபத்து...ஆபத்து...” என்று தொடங்கும் வார்த்தையில் வரிகள் எழுதியிருக்கும் ஞான ஆரோக்கிய ராஜா, அப்படியே ஒரிஜினல் எம்.ஜி.ஆர் பாடல் போலவே ஒலிப்பதிவு செய்ததோடு, காட்சியும் படுத்தியுள்ளார். இப்பாடல் மூலம் அரசு மற்றும் காவல் துறையின் கட்டுப்பாட்டை மக்கள் எப்படி மதித்து நடக்க வேண்டும், அப்படி மதித்து நடக்காமல் போனால் எப்படி பட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும், என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

 

 

அதேபோல், சிவாஜி கணேசனின் “எங்க மாமா” படத்தில் இடம்பெறும் ‘செல்ல பிள்ளைகளா தொட்டிலிலே...” என்ற பாடலின் மெட்டுக்கு “செல்ல கிளிகளே வாருங்கள்...” என்று தொடங்கும் வாத்தை மூலம், சிறுவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

 

இந்த இரண்டு பாடல்கள் மூலமாகவும் சிறுவர் முதல் பெரியவர் வரை என அனைத்து தரப்பினருக்கும் கொரோனாவின் ஆபத்து மற்றும் அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி, என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, தற்போதைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வரும், என்ற நம்பிக்கையையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்.

 

 

இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, பள்ளியில் படிக்கும் போதே டி.ராஜேந்தரின் படங்களை பார்த்துவிட்டு அவரைப் போலவே சூப்பர் ஹிட் பாடல்களுடன் படம் இயக்கி தயாரிக்க வேண்டும், என்று நினைத்தவர், அந்நாள் முதல் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டு பயணித்தவர் தற்போது அதில் வெற்றி பெற்றிருக்கும் ஞான ஆரோக்கிய ராஜா, ‘உதிர்’ படம் இயக்குநராக் அறிமுகமாவததோடு, அப்படத்திற்கு பாடல்களும் எழுதியிருக்கிறார்.

 

டி.ராஜேந்தர் பாணியில் காதல் மூலம் மக்களை உருக வைக்கும் விதத்தில் உருவாகும் ‘உதிர்’ படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் வகையில் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருக்கிறது. மேலும், படத்தின் காமெடி காட்சிகளும் பெரும் வரவேற்பு பெரும் வகையில் அமைந்திருக்கிறது. காரணம், படத்தில் 20 நகைச்சுவை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களை மூன்று பாககங்களாக பிரித்து காமெடி காட்சிகள் வடிவமைத்திருப்பதால், படம் முழுவதும் காமெடி காட்சிகள் நிறைந்திருக்கிறது.

 

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கியராஜா, புகழேந்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘உதிர்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கொரோனா பாதிப்பால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஞான ஆரோக்கிய ராஜா, மேற்கொள்ள இருக்கும் கொரோனா விழிப்புணர்வு பணிக்கு படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Related News

6467

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery