ஒரு காலத்தில், நள்ளிரவு நேரங்களில் சென்னை சாலைகளில் டோனியுடன் பைக்கில் உலா வந்த ராய் லட்சுமி, தற்போது “டோனி யார்?” என்று கேள்வி கேட்டு ரசிகர்களை கவலையடைய செய்துள்ளார். ஆனால், அவரது இந்த கேள்விக்கு பின்னால் பெரிய கதையும் இருக்கிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதுவராக இருந்த ராய் லட்சுமி, அந்த அணியின் கேப்டன் டோனியுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், இரவு நேரம் என்றால், சென்னை சாலைகளில் பைக்கில் உலா வருவதோடு, ஒன்றாக தனிமையிலும் தங்களது நட்பை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராய் லட்சுமியிடம் டோனி குறித்து கேட்கப்பட்டதற்கு, “டோனியா யார் அவர்? என்று கேள்வி எழுப்பியவர். ”இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது ஒரு காலத்தில் நடந்தது. தற்போது அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.
நான் டோனியை திருமணம் செய்யப் போகிறேன் என்று மக்கள் நினைத்தார்கள், அது உண்மை இல்லை. டோனி விஷயம் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. ஏன் என்றால் நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன்.
சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகாது. அப்போது அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இனி இது பற்றி பேச விரும்பவில்லை.” என்று தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி, ‘ஜுலி 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...