கொரோனா பாதிப்பால் நாட்டில் உயிர் பலி அதிகரித்து வருவது ஒரு பக்கம் இருக்க, பசியாலும் சிலர் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சியடைய செய்கிறது. பசியால் வாடும் ஏழை மக்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறையை சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர், தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பலர் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்வதோடு, தமிழக மக்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் அருகே இரண்டு பேர், கொரோனா பதிப்புக்கு ரஜினி அதிகம் நன்கொடை கொடுத்திருக்கிறாரா அல்லது விஜய் கொடுத்திருக்கிறாரா, என்று வாக்குவாதம் செய்துள்ளனர். ரஜினி, மற்றும் விஜய் ரசிகர்களான இவர்களுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் அடிதடியாக மாற, ரஜினி ரசிகர் விஜய் ரசிகரின் தலையில் பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜய் ரசிகர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, நடிகர்களுக்காக இருவர் அடித்துக் கொண்டதும், அதனால் கொலை சம்பவம் நிகழ்ந்த்ருப்பதும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...