Latest News :

சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு! - கூட்டறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்கள்
Monday April-27 2020

கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த துறைகளை மீண்டும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வது எப்படி, என்பது குறித்து அரசும் பொருளாதார வல்லுநர்களும் ஆலோசித்து வருகிறார்கள். அதேபோல், பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சினிமா துறையில் முதலீடு செய்திருப்பவர்களும், அதில் இருந்து மீள்வதற்கான மாற்று வழியை தேடி வருகிறார்கள்.

 

அந்த வகையில், டிஜிட்டல் தளமான OTT (OVER THE TOP)-யில் படங்களை வெளியிட்டு, குறைந்தது நஷ்ட்டத்தையாவது தவிர்க்கலாம், என்று முடிவு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள் பலர் தங்களது படங்களை திரையரங்கில் ரிலீஸ் செய்ய காத்திருக்காமல், நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.

 

இதற்கிடையே, நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை அமேசான் OTT தளத்திற்கு விற்பனை செய்ய, அதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இனி சூர்யா மற்றும் அவர் சார்ந்தவர்களின் திரைப்படங்களை திரையரங்கங்களில் வெளியிட தடை விதித்திருப்பதாக அறிவித்துள்ளது.

 

இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் பலர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜா, டி.ஜி.தியாகராஜன், அம்மா கிரியேஷன் சிவா, கே.எஸ்.சீனிவாசன், கே.ராஜன், ஜி.தனஞ்செயன், கே.இ.ஞானவேல்ராஜா, பெப்ஸி சிவா உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கூட்டாக சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

அந்த அறிக்கையில், “திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.

 

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஹிந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் வாங்க கோர வேண்டும்.

 

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம்.

 

திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.

 

இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

6478

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery