Latest News :

கண்ட இடத்தில் கை வைத்த சினேகன் - சுஜா பரபரப்பு புகார்!
Tuesday September-19 2017

கட்டிபிடி கலாச்சாரத்தால் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சினேகன், அந்த சர்ச்சையின் வடு மறைவதற்குள் அவருக்கு விழி புதுங்கிவிட்டது. இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர், தலைவன் ரேஞ்சிக்கு கெத்தாக இருந்த நிலையில், தற்போது போட்டி இறுதி நிலையை எட்டுகையில், சினேகனின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, வெறி பிடித்தவரைப் போல நடந்துக் கொள்ளும் சினேகன் சக போட்டியாளர்களை அடிக்க பாய்வதும், அவர்களை கேவலமாக திட்டுவதும் என்று மட்டும் இல்லாமல், பெண் போட்டியாளர்கள் மீது கண்ட இடத்தில் கை வைத்து தடவுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

 

இது குறித்து கணேஷிடம் சுஜா கூறுகையில், “முன்பு பிந்து ஏன் கேமில் இருந்து சென்றார் என்று எனக்கு தற்போது புரிகிறது. சினேகன் ரொம்ப ஆவேசமாக விளையாடினார். ஹரிஷை போட்டு தரதரவென இழுத்தார். அது தப்பு.

 

கேமில் இப்படி எல்லாம் செய்யக் கூடாது. வேண்டும் என்றே மைக்கை பிடித்து அறுத்தார் சினேகன். அதனால் நான் அவரை இழுத்தபோது உன்னை அடித்துவிடுவேன் என்றார். அவர் அடிச்சா நான் சும்மா இருப்பேனா? அவருக்கு 2 கை இருந்தால் எனக்கு இல்லையா? என்னை எல்லாம் அடிக்க முடியாது. கேம் இல்லை சண்டை தான் நடந்தது.

 

விளையாடும்போது நீங்கள் எப்படி பிந்து மீது கண்ட இடத்தில் கை படக்கூடாது என்று கவனமாக இருந்தீர்கள். ஆனால் சினேகன் அப்படி இல்லை, என்று சுஜா கூறினார்.

 

சுஜா வாருணியின் இந்த குற்றச்சாட்டால் ஏற்கனவே டேமேஜான சினேகனின் பெயர், இப்போது பெரிய அளவில் டேமேஜாகியுள்ளது.

Related News

648

”சினிமாவில் அதிகரிக்கும் பிளாக் மெயில்” - ’வள்ளுவன்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம்
Thursday October-30 2025

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...

’தாரணி பட விழாவில் விஜயை விமர்சித்த நடிகர் விஜய் விஷ்வா!
Tuesday October-28 2025

மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...

’கசிவு’ ஆத்ம திருப்திக்காக நடித்த படம் - எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி
Wednesday October-29 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery