தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் ஆகியோர் தரப்பு ரசிகர்கள் அவ்வபோது மோதிக்கொள்வத் வழக்கமான இன்று தான். இவர்களின் மோதல்கள் சமூக வலைதளத்தில் தொடங்கி, கொலை வரை சென்றிருக்கும் நிலையில், இவர்களுடன் ரஜினி ரசிகர்களும் மோதலில் ஈடுபடுவது அவ்வபோது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட, விழுப்புரம் மாவட்டத்தில், யார் அதிக நன்கொடை வழங்கியது, என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள், ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ள இதில், விஜய் ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘பேட்ட’ படங்கள் வெளியான போது, ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் மோதிக் கொண்டது போல, தற்போதும் மோதலில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.
அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்தே’ படம் உருவாகி வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படப்பிடிப்பு தொடங்கும் போதே அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதேபோல், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. ‘அண்ணாத்தே’ படத்திற்கு முன்பாகவே ‘வலிமை’ படப்பிடிப்பு தொடங்கியிருந்தாலும், சில பிரச்சினைகளால் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டதோடு, கொரோனா பாதிப்பினாலும் ‘வலிமை’ பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டதால், படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே, கடந்த பொங்கல் பண்டிகையில் ரஜினி மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியானதால், இரு தரப்பு ரசிகர்களும் மோதிக் கொண்ட நிலையில், மீண்டும் அதே சூழல் உருவாகியிருப்பதால், மீண்டும் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...