அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளியன்று வெளியாகியுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தற்போது ‘ஸ்பைடர்’ பணிகளில் பிஸியாக உள்ள முருகதாஸ் அபப்டத்தின் ரிலிஸிற்கு பிறகு, விஜய் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் முருகதாஸ் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பணிகளும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து விஜய் இந்தியாவை விட்டே கிளம்பிவிட்டார்.
ஏற்கனவே தனது குடும்பத்தாரை பார்சிலோனாவுக்கு அனுப்பி வைத்த விஜய், மெர்சல் படத்தின் வியாபாரம் சம்மந்தமான சில பணிகள் இருந்த காரணத்தால், தனது குடும்பத்தாருடன் செல்லவில்லையாம். நேற்று எஞ்சியிருந்த பணியும் முடிந்ததால், இன்று விஜய் பார்சிலோனாவுக்கு கிளம்பிவிட்டார். சென்னையிலிருந்து துபாய்க்குச் சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார்.
தனது குடும்பத்தோடு பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றுள்ள விஜய், ‘மெர்சல்’ படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...