Latest News :

வெங்கட் பிரபுக்கு அடித்த ஜாக்பாட்!
Thursday April-30 2020

’சென்னை 600028’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’ என பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்கத்தில் இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சென்னை 600028 - 2’ வெளியானது. அதன் பிறகு அவர் இயக்கிய ‘பார்ட்டி’ படம் முடிவடைந்தாலும் வெளியாகமல் இருக்கிறது.

 

இதனால், சுமார் 3 ஆண்டுகள் பட வாய்ப்பில்லாமல் இருந்த வெங்கட் பிரபுவுக்கு சிம்புவை இயக்க வாய்ப்பு கிடைக்க ’மாநாடு’ படத்தை தொடங்கினார். ஆனால், அப்படமும் சில பிரச்சினைகளால் கைவிடப்பட்ட நிலையில், பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனா பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 

இப்படி, பல பிரச்சினைகளால் துவண்டு போன வெங்கட் பிரபு, தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் எப்படி உலக மக்கள் சந்தோஷப்படுவார்களோ அதுபோன்ற ஒரு சந்தோஷத்தில் இருக்கிறாராம். இதற்கு காரணம் அவர் தயாரித்த ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் தானாம்.

 

‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஆர்.கே.நகர்’. வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம், நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் ஆவது தொடர்பான பிரச்சினைகளுக்கு இடையே, திடீரென்று இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

 

இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படம் நெட்பிளிக்ஸில் வெளியானது குறித்தும், அதன் மூலம் வெங்கட் பிரபுக்கு அடித்த ஜாக்பாட் பற்றியும் தகவல் ஒன்று கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது.

 

அதாவது, ‘ஆர்.கே.நகர்’ படத்தி ரிலீஸ் தொடர்பான பணியில் ஈருபட்டிருந்த தயாரிப்பு தரப்பு, அது தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டதுடன், படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்வது பற்றிய பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு இருந்ததம். ஆனால், அந்த பேச்சு வார்த்தை முடிவதற்குள், நெட்பிளிக்ஸில் ‘ஆர்.கே.நகர்’ வெளியாகும் என்று அந்நிறுவனம் விளம்பரம் செய்துவிட்டதாம்.

 

RK Nagar

 

இதை அறிந்து அதிர்ச்சியான, ‘ஆர்.கே.நகர்’ தயாரிப்பு தரப்பு, தங்களிடம் கேட்காமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதால், தங்களது படத்தின் வியாபாரம் முடங்கிவிட்டதாகவும், இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி நெட்பிளிக்ஸ் மீது வழக்கு தொடர்ந்தார்களாம். இதையடுத்து, இழப்பீடு வழங்கும் வகையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ‘ஆர்.கே.நகர்’ படத்தை ரூ.4.50 கோடிக்கு வாங்கிக் கொண்டதாம்.

 

இந்த தொகை நிச்சயம் படத்தின் பட்ஜெட்டை விட அதிகமானதாக இருக்கும் என்றும், தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தால் கூட இந்த தொகையை தயாரிப்பு தரப்பு ஈட்டியிருக்குமா? என்பது சந்தேகம் தான், என்றும் கோல்வுட்டில் பேச்சு அடிபடுகிறது.

Related News

6490

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery