தமிழ் பிக் பாஸ் இதுவரை மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி மூன்றுமே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஆண்டு நான்காவது சீசன் தொடங்க இருந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், கொரோனா பிரச்சினை முடிந்துவுடன் பிக் பாஸ் நான்காவது சீசனை ஒளிபரப்புவதற்கான பணியில் சம்மந்தப்பட்ட சேனல் தீவிரம் காட்டி வருகிறதாம்.
தற்போது போட்டியாளர்கள் தேர்வில் ஈடுபட்டுள்ள பிக் பாஸ் குழு அதற்கான பேச்சு வார்த்தையை நடத்தி வரும் நிலையில், போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியானது. ஆனால், அது அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும், தற்போது பிக் பாஸ் நான்காவது சீசனுக்கு போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சிலரது பெயர்கள் லீக் ஆகியுள்ளது.
அந்த வகையில், ‘ஜோக்கர்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் இன்றி தவித்த ரம்யா பாண்டியன், தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அப்புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் நான்காவது சீசனுக்கான போட்டியாளராக பங்கேற்பது குறித்து ரம்யா பாண்டியனிடம் கடந்த சில மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்ததாம். தற்போது இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் ரம்யா பாண்டியன், அப்படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விட்டால் என்ன செய்வது, என்று யோசித்து வந்தவர், இது தொடர்பாக தான் நடிக்க இருக்கும் புதுப்படங்களின் தயாரிப்பாளர்களிடம் பேசி அனுமதி பெற்ற பிறகு பிக் பாஸ் குழுவினருக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும், பிக் பாஸ் நான்காவது சீசனில் ரம்யா பாண்டியன் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...