கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகர், நடிகைகள் அவ்வபோது சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி, புகைப்படம் ஒன்றின் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மீ டூ புகார் மூலம் ஆந்திர சினிமாவையே அதிர வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய இவர், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று பலர் மீது செக்ஸ் புகார் அளித்ததோடு, அவ்வபோது அவர்களை சோசியல் மீடியாக்களில் கழுவி கழுவி ஊற்றுவார்.
இப்படி ஆந்திரா சினிமா பிரபலங்ளுக்கு பெரும் டார்ச்சர் பேபியாக இருந்தவரை, அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்க, தமிழகத்திற்குள் நுழைந்த அம்மணி, கோலிவுட் பிரபலங்கள் பலர் மீதும் செக்ஸ் புகார் கூறினார். அவர் புகார் கூறியவர்கள் அனைவரும் மவுனமாக இருக்க, அவருக்கு சம்மந்த இல்லாத சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஸ்ரீ ரெட்டியால் புகார் கூறப்பட்ட சிலர் அவருக்கு பட வாய்ப்பு தருவாதாக அறிவித்ததோடு, சில பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்ததால், தமிழகத்திலேயே செட்டிலாக முடிவு செய்த ஸ்ரீ ரெட்டி தற்போது சொகுசு கார், ஆடம்பர பங்களா என்று சென்னையில் வசித்து வருகிறார்.
சென்னையில் வசித்து வந்தாலும், தொடர்ந்து ஆந்திர சினிமா பிரபலங்கள் குறித்து சோசியல் மூடியாக்களில் அவ்வபோது சர்ச்சையான பதிவுகளை வெளியிடுபவர், திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா என்று பல முன்னணி ஹீரோயின்களை வம்புக்கு இழுக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஊரடங்கினால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஸ்ரீரெட்டி, அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்ப்பும் வரவேற்பும் பெற்று வருபவர், சமீபகாலமாக சரக்கு பாட்டிகளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று மது கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், ஊரடங்கில் சரக்கு கிடைக்காமல் நாங்கள் கஷ்ட்டப்படுகிறோம், உங்களுக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைக்கிறது, என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...