கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பல்வேறு துறையை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண தொகை மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை, என்பதே அனைவருடைய கருத்தாக உள்ளது.
இதற்கிடையே, பல தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதேபோல், சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சினிமாத் துறையை சார்ந்த சங்கங்களுக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்கு தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள ‘ஆல் மூவி மீடியட்டர்ஸ் அசோசியேஷன்ஸ்’ (அம்மா மூவி அசோசியேஷன்) தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு 2 வது முறையாக உறுப்பினர்களுக்கு நிவாரண பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் தனது உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான் மற்றும் பண உதவியை வழங்கியது அம்மா மூவி அசோசியேஷன்.
ஊரடங்கு 40 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நேற்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கிவருவது திரைத்துறையினர் மத்தியில் விவாதப்பொருளாகி வருகிறது.
இது குறித்து அம்மா மூவி அசோசியேஷன் செயலாளர் சரவணன் கூறுகையில், “தமிழ் சினிமாவில் வருடந்தோறும் 200 திரைப்படங்கள் வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன சுமார் 2000 கோடி மதிப்புள்ள இந்த படங்களின் தமிழக வியாபாரம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாட்டு விநியோக உரிமை, ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை என வியாபாரம் செய்வதற்கு சரியான நபர்களை அடையாளம் காண தயாரிப்பாளர்களுக்கு பாலமாக இருப்பவர்கள் பிலிம் மீடியேட்டர்கள்
இவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமானது எங்களது இந்த முயற்சிக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குனர்கள் என பலதரப்பினரும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர் அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம்.” என்றார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...