Latest News :

படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பெப்ஸி அமைப்பு கோரிக்கை
Sunday May-03 2020

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா துறையும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வருவதால், அத்துறையை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியிருக்கும் பல ஆயிரம் தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள்.

 

இந்த நிலையில், சில தொழில்துறைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதித்திருப்பது போல சினிமா மற்றும் தொலைக்காட்சி துறைக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

 

இது தொடர்பாக பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில், “தற்போது ஊரடங்கு போடப்பட்டு ஏறக்குறைய 55 நாட்களை தொடர் இருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பினை கருதி மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ்த் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50 ஆவது நாள். வெள்ளிவிழா, பொன்விழா என திரைப்பட வெற்றிகளை சந்தோஷமாக கொண்டாடிய திரைப்படத்துறை இந்த வேலை முடக்கப்பட்ட 50 வது நாள், என்று அறிவிக்கக்கூடிய துர்பாக்கியமான துன்பமான சூழ்நிலையில் உள்ளோம்.

 

தமிழ்த் திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் ரூ.100, தமித் திரைப்பட கலைஞர்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை வழியாக ரூ.1500-க்கான உணவு பொருள்கள், அமிதாப்பசன் மூலம் சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லரி வழங்கிய ரூ.1500 மதிப்பிலான உணவுப் பொருள்கள் என ஏறக்குறைய ரூ.4000 ரூபாய்க்கான உணவுப் பொருள்களை வைத்து இந்த 50 நாள் வேலை முடக்கத்தில் பசிப்பினியில் இருந்து எங்கள் தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி உள்ளோம்.

 

இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசிப்பினியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தற்போது 17 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போல் திரைப்படத்துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனைகளோடு அனுமதி வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

குறைந்த பட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ-ரெக்கார்டிங், டப்பின் போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கினால், சம்மேளனத்தின் 40, 50 சதவிகித தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் பணி செய்ய வைக்க இயலும், என்பதால் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும் மற்றும் தொலைக்காட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்து பாதுகாப்புகளுடன் சுகாதரமான முறையில் இந்த பணிகளை செய்வோம், என்று உறுதி அளிக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

6497

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery