அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் டிவி நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்றிருக்கும் பிக் பாஸ் நான்காவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், நான்காவது சீசனுக்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும், தற்போது போட்டியாளர்களின் தேர்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என 17 பேர் கொண்ட பட்டியல் ஒன்று வைரலானது. ஆனால், இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், அப்பட்டியலில் இருப்பவர்களில் சிலர் பிக் பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்களாக தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், அந்த 17 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் இது தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் அளிக்காத நிலையில், அப்பட்டியல் இடம்பெற்றிருந்த சாய் சக்தி, இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக சாய் சக்தியிடம் கேட்ட போது, ”பிக் பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்கள் என்ற பெயரில் வெளியான பட்டியலில் எனது பெயர் இருப்பது வியப்பாக உள்ளது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாகவே இருக்கிறேன், ஆனால் இதுவரை எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், மிக சந்தோஷமாக அதை ஏற்றுக் கொள்வேன்.
ஆனால், இதுவரை எனக்கு பிக் பாஸ் நான்காவது சீசன் குழுவினரிடம் இருந்து எந்த அழைப்போ அல்லது அது தொடர்பாகவோ யாரும் பேசவில்லை. எனவே, அந்த பட்டியலை யாரும் நம்ப வேண்டாம். அது போலியான பட்டியல். அந்த பட்டியலால் பலர் என்னை தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். எனவே, அந்த பட்டியலை யாரும் நம்ப வேண்டாம், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
’நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடரில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான சாய் சக்தி, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர், விஜய் டிவி-யின் ஜோடி நம்பர் ஒன் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...