தமிழக உள்ளாட்ச்சி தேர்தலுக்கு இணையாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல். தேர்தல் நடந்தாலும் நீதிமன்ற வழக்கால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மேலும், மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்ட நிலையில், கொரோனா பிரச்சினையால் தற்போது நலிவடைந்த நடிகர்களுக்கு உதவி செய்யும் பணிகளில் நடிகர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்போது விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தலைமையிலான அணி மற்றும் பாக்யராஜ், ஐசர் கணேஷ் ஆகியோர் தலைமையிலான அணி, என நடிகர் சங்கத்தில் இரண்டு அணிகள் இருக்கும் நிலையில், இரு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
இப்படி கொரோனாவுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் இவர்கள், இது தொடர்பாக நடிகர் சங்க வாட்ஸ்-அப் குரூப்பில் அதை பகிர்ந்துக் கொள்ளும் போது ஏற்பட்ட பிரச்சினையில், நாடக நடிகர் ஒருவர், சீனியர் சினிமா நடிகையை “உங்க தொழில் வேற” என்று விமர்சிக்க, அதனால் நடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் மிகப்பெரிய யுத்தமே நடந்து வருவதாக பிரபல வாரத இதழ் ஒன்று தனது இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
'SIAA' என்ற பெயரில் இயங்கும் நடிகர் சங்க வாட்ஸ்-அப் குரூப்புக்கு விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோர் அட்மின்களாக இருக்கிறார்கள். இந்த குரூப்பில் கொரோனா நிவாரண பணிகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன், தனது மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர்களுக்கு செய்த உதவிகள் குறித்து தகவல் வெளியிட்ட போது, பிரபல நடிகை ரஞ்சனி, “இவர் யார்? நடிகரா? என்று கேட்டிருக்கிறார். இதனால், கோபமடைந்த வாசுதேவன், “நான் நாடக நடிகர், உங்க தொழில் வேற” என்று பதிலளிக்க, கோபமடைந்த ரஞ்சனி, தன்னை இழிவாக பேசிவிட்டார், என்று கூறியதோடு, அவர் மீது வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளாராம். அதேபோல், பல நடிகர், நடிகைகள் வாசுதேவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவரது ஆதரவாளர்கள் ரஞ்சனி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
இந்த வாட்ஸ் அப் பிரச்சினை சுமார் நான்கு நாட்களாக நடந்துக் கொண்டிருக்க, நடுநிலையாக உள்ள பலர் நடிகர்கள், இந்த சண்டையை நிறுத்தும்படி எவ்வளவு கேட்டும், சண்டை நிற்காகாததால் குரூப்பில் இருந்து வெளியேறி வருகிறார்களாம்.
அதே சமயம், தன்னை தரக்குறைவாக பேசியதாக திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் வாசுதேவன் நடிகை ரஞ்சனி மீது புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாடக நடிகர் வாசுதேவன் விஷால் அணியை சேர்ந்தவர். நடிகை ரஞ்சனி ஐசரி கணேஷின் அணியின் சார்பில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...