’ஹவுஸ் ஓனர்’ ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷ் - அசோக் செல்வன் ஜோடி!
Tuesday July-18 2017

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், தான் இயக்கும் நான்காவது படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ (House Owner) என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அசோக் செல்வன் ஹீரோ ஹீரோயினாக நடிக்கின்றனர்.

 

இப்படம் குறித்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன், “நான் முதலில் சென்னையை பாதித்த  வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால், குறிப்பிடப் பட்ட அந்த  படத்தை அவளது திருமணத்துக்கு  பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு ஹிந்தி திரைப் படம் பார்க்க நேரிட்டது, அந்த படம் என்னை வெகுவாக  கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை.  ஆனால் அந்த படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான , அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதை  நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்ல போகிறேன்.” என்றார்.

 

பிரபல ஒளிப்பதிவாளர் ஜோனான் டி.ஜான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related News

65

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery