சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்வது அதிகரித்து வரும் நிலையில், சில நட்சத்திர தம்பதிகள் திருமணமாகி ஒரு வருடத்திலேயே பிரிந்துவிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், திருமணமான ஒரே வருடத்தில் பிரிந்த தனது கணவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறப் போவதால் பிரபல சீரியல் நடிகை பெரும் கவலை அடைந்திருக்கிறார்.
பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்தவர் மேக்னா வின்செண்ட். இப்படத்தை தொடர்ந்து மலையாள தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் இவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். அவரது முதல் சீரியலேயே அவரை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க, அதை தொடர்ந்து ‘பொன்மகள் வந்தாள்’ ,’அவளும் நானும்’ ஆகிய சீரியல்களில் நடித்து முன்னணி சீரியல் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே டான் டோமி என்பவரை மேக்னா வின்செண்ட் கடந்த 2017 ஆம் திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், நீதிமன்றம் மூலம் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், மேக்னா வின்செண்டுக்கும், டான் டோமிக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருக்கும் நிலையில், டான் டோமி இரண்டாவது திருமணத்திற்கு தயராகி விட்டதாக கூறப்படுகிறது.
தனது முன்னாள் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதை அறிந்த மேக்னா வின்செண்ட் பெரும் சோகத்தோடு இருக்கிறாராம். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...