தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஷெரின், சில வருடங்களில் பட வாய்ப்புகள் இன்றி ஓரம் கட்டப்பட்டார். அதன் பிறகு ஒரு பாடலுக்கு நனடம் ஆடினாலும், அந்த வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்காமல் போக, சினிமாவிட்டு முழுவதுமாக ஒதுங்கிவிட்டார்.
இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஷெரின், மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாக, தற்போது அந்த பாப்புலாரிட்டியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வபோது ரசிகர்களுடன் சாட் செய்வது, புகைப்படங்கள் வெளியிடுவது, டிக் டாக் வெளியிடுவது என்று சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அதே சமயம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தஷனுக்கும் அவருக்கும் இடையே காதல் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அந்த சர்ச்சை அடங்காமல் இருந்ததால், ஷெரினின் பெயர் தொடர்ந்து மீடியாக்களில் அடிபட, அவரும் பிக் பாஸ் பிரபலங்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற தொடங்கினார். குறிப்பாக தர்ஷனுடம் அவர் வெளியே செல்வது, புகைப்படம் வெளியிடுவது போன்றவற்றில் பிஸியாக இருந்ததால், அவர் தர்ஷனை காதலிப்பதாகவே ரசிகர்கள் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் பல்வேறு வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் ஷெரின், தனது காதலனிடம் இப்படி தான் காதலை சொல்வேன், என்று கூறி கலாட்டாவான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...