Latest News :

விஜய் படத்தை நிராகரித்த பிரபல இயக்குநர்! - அதிர்ச்சியில் கோலிவுட்
Tuesday May-05 2020

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக உருவெடுத்திருக்கும் விஜயை வைத்து படம் தயாரிக்க பலர் ஆர்வமாக இருப்பதோடு, அவரது படத்தை இயக்கும் வாய்ப்புக்காக பல முன்னணி இயக்குநர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

இதற்கிடையே, விஜயின் 65 வது படம் பற்றிய தகவல் ஒன்று கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அச்செய்தியால் ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிர்ச்சியும் அடைந்திருக்கிறது.

 

‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருக்கும் போதே, தனது 65 வது படத்திற்காக கதை கேட்க தொடங்கிய விஜய், பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார். அப்படி அவர் கேட்ட கதைகளில் ‘இறுதி சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா சொன்ன கதை மிகவும் பிடித்திருந்ததாம். படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸுக்கும் கதை பிடித்துவிட, ஓகே சொல்லிவிட்டார்களாம்.

 

விஜயின் 65 வது படத்தை சுதா கொங்கரா இயக்குவது கிட்டதட்ட உறுதியான நிலையில், திடீரென்று விஜயின் 65 வது படத்தை இயக்கும் வாய்ப்பை ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றார். திடீரென்று நடந்த இந்த மாற்றத்தினால் கோலிவுட் சற்று குழப்பமடைந்ததோடு, எதனால் இந்த மாற்றம் நிகழ்ந்தது, என்பதும் தெரியாமல் இருந்தது.

 

இந்த நிலையில், விஜய் படத்தை சுதா கொங்கரா இயக்க முடியாமல் போனதற்கான காரணம் பற்றி கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது சுதா கொங்கராவின் கதைக்கு விஜயும், சன் பிக்சர்ஸும் ஓகே சொல்லியவுடன், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற, தயாரிப்பு தரப்பு அத்தனையும் இயக்குநரின் சாய்ஸ் என்று கூறிவிட்டதாம்.

 

இதையடுத்து தொழில்நுற்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட சுதா கொங்கரா, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகஷ் குமாரை தேர்வு செய்தாராம். உடனே விஜய் தரப்பில் இருந்து சுதாவிடம் பேசிய நபர், இசையமைப்பாளராக யாரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், ஜி.வி.பிரகாஷ் மட்டும் வேண்டாம், என்று கூறினாராம். மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் என்றால் இந்த படமே நடக்காது, என்றும் கூறினாராம்.

 

தனது கதைக்கு எந்த இசையமைப்பாளர் சரியாக இருப்பார் என்று தனக்கு தான் தெரியும், அதை விட்டுவிட்டு இவர் வேண்டும், அவர் வேண்டாம், என்று எனக்கு கட்டுப்பாடு விதித்தால், அப்படிப்பட்ட படமே தேவையில்லை, என்று கூறி விஜய் படத்தை சுதா கொங்கரா நிராகரித்து விட்டாராம்.

 

Director Sudha Kongara

 

ஒரு இசையமைப்பாளருக்காக விஜய் படத்தை சுதா கொங்கரா கைவிட்டிருப்பதாக பரவும் இந்த தகவல் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றாலும், அவர் விஜய் படத்தை இயக்காமல் போனதற்கான காரணம் இது தான் என்று சில நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதே சமயம், இந்த குழப்பங்கள் அனைத்திற்கும் விஜய்க்கு மேனேஜராக இருப்பவரால் தான் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. 

 

தற்போது விஜய்க்கு மேனேஜராக இருப்பவர் ஆரம்பத்தில் ஜி.வி.பிர்காஷ் குமாருக்கு உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6504

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery