தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு சுமார் 410 நாட்களை கடந்திருக்கும் நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அரசு நேற்று முதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், வரும் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்திருக்கிறது. இது மக்களுக்கும், பெண்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘ஆடவர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், ‘மக்கள் செயல் பேரவை’ தலைவருமான சொ.சிவக்குமார் பிள்ளை மதுக்கடை திறப்பு எதிர்ப்பு தெரிவித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த கட்டுரை,
சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாண்மை பண்ணுவதுபோல் ஆளுமை இல்லா தமிழகத்தில் காசுக்காக, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதல் அமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை ஆளும்கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்கள் செய்வதை பார்த்ததால் தமிழக மக்களை வேதனையில் விழி பிதுங்க வைக்கிறார்கள்.....
கடந்த மூன்றுமாதமாக கொரனவை ஒழிக்கிறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள் கொரானாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை....
கோவில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள் ....
கொரானாவின் காற்றும் குறையாது ....
மதுவின் நாற்றமும் குறையாது ....
உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ....
நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள் ....மது குடிப்பவர்களை அழித்துவிடும்.... கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை கொள்ளும் விஷம் என்று தெரியாமல் குடிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் மதுக்கடைக்கு போவதால் கொரானாவின் தாக்கம் அவர்களுக்கு வந்து அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தையே பாதிக்கும்....
இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் இளைஞர்களும், தாய்மார்களும் கவனமாக இருக்கவேண்டும் ....
உங்கள் இடத்தில் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்....
யாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீர்கள்.
மதுவை குடிப்பதற்கு அனுமதிக்காதீர்கள் ....
மது குடிப்பதினால் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் காலம் முழுவதும் கவலை படும்படி செய்துவிடும்....
மதுவை தவிர்ப்போம்...
மகத்தான வாழ்வை தொடர்வோம்....
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...