இன்று உலகமே கொரோனா வைரஸுக்கு எதிராகப் பெரும் போரை நிகழ்த்தி வருகிறது. பொதுவாக போர்களில் வெல்ல ஆயுதங்கள் தான் தேவை. ஆனால் இந்தக் கொரோனா வைரஸ் ஆயுதங்களுக்கு அப்பார்ப்பட்டது. ஆயினும் எல்லாவற்றையும் விட பெரிய ஆயுதம் மனிதனின் அன்பு தான். அந்த அன்பாயுதத்தால் ஒரு பாடலை எழுதி அற்புதமாக வெளியிட்டு மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
”விழா கண்ட நகரெங்கே...” எனத் துவங்கும் இப்பாடலை தும்பா புரொடக்சன் தயாரித்துள்ளது. எம்.ராம்குமார் இயக்கிய இப்பாடலை டாக்டர் பாலன் எழுதியுள்ளார். சந்தோஷ் சேகர் இசையமைத்துள்ளார்.
ஒரு மென்சோகத்தை படரவிடுவது போல் துவங்கும் இப்பாடல் மெல்ல நம் மனதிற்குள் நம்பிக்கையை விதைக்கிறது. மேலும் பல்வேறு அரசியல் சதுரங்கத்தையும் பாடல் வரிகள் மூலமாகவும் காட்சி அமைப்பு மூலமாகவும் உணர்த்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தாற் போல் இன்று மருத்துவர்கள் நமக்காக அளித்து வரும் மாசற்ற சேவைக்கு இப்பாடல் மரியாதை செய்துள்ளது.
யுடியுபில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல் இதோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...