'மாநகரம்’ மற்றும் ‘கைதி’ என்று இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜயை வைத்து இயக்கிய ‘மாஸ்டர்’ கொரோனா பிரச்சினையில் சிக்கி, வெளியாவதில் சிக்கலை சந்தித்துள்ளது. அதே சமயம், லோகேஷ் கனகராஜின் அடுத்தப் படமும் இன்னும் உறுதி செய்யப்படாமல் இழுபறியிலேயே இருக்கிறது.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கு ஒரு கதை சொல்ல, அந்த கதைக்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட்டதாகவும், அப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் வெளியாகி சில மாதங்கள் ஆன பிறகும் ரஜினி தரப்பில் இருந்து இறுதி முடிவு வரவில்லையாம்.
இதனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குழப்பமடைந்த நிலையில், அவர் கதையில் நடிக்கலாமா, வேண்டாமா என்று ரஜினியும் சிலரிடம் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார். காரணம், லோகேஷ் சொன்ன கதை, ப.ரஞ்சித் பாணியிலான படம் போல இருந்ததாம். ஆனால், ரஜினிகாந்த் வியாபார நோக்கில், கமர்ஷியலான கதையை தான் எதிர்ப்பார்த்ததால், லோகேஷ் கனகராஜில் நடிப்பது குறித்து ரொம்பவே யோசித்தாராம்.
இந்த நிலையில், ரஜினி தரப்பில் இருந்து லோகேஷ் கனகராஜுக்கு ரெட் சிக்னல் வந்துவிட்டதாம். அதாவது அவரது கதையை ரஜினிகாந்த் நிராகரித்துவிட்டாராம். இதனால் அப்செட்டான லோகேஷுக்கு ஆறுதல் சொல்லிய கமல்ஹாசன், அப்படியே அந்த கதையில் தானே நடிப்பதாகவும் கூறிவிட்டாராம்.

கமலின் இந்த வார்த்தையை கேட்டு பெரும் சந்தோஷமடைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது முழு திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...