‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. அதற்கு முன்பு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தவர், சூரியுடன் சேர்ந்து நடித்த “புஷ்பா புருஷன் யாரு?” என்ற காமெடி காட்சி மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார்.
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 3-யில் பங்கேற்ற ரேஷமாவுக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு திருமணமாகிவிட்டதையும், தனக்கு ஒரு மகன் இருக்கிறான், என்ற ரகசியத்தை ரேஷ்மா கூறினார். அதுவரை அவருக்கு திருமணமாகவில்லை, என்று நினைத்திருந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
தனக்கு மகன் இருக்கிறான், என்று கூறினாலும் மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த ரேஷ்மா, தற்போது தனது மகனின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவுக்கு அவரது மகன் ராகுல் காபி போட்டு கொடுக்கிறார். அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரேஷ்மா, கடந்த இரண்டு நாட்களாக மனதளவு பாதிக்கப்பட்டிருந்த என்னை சிரிக்க வைப்பதற்காக தனது மகன் இப்படி காபி போட்டு கொடுத்தார், என்றும் பதிவிட்டுள்ளார்.
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...