கெளதம் மெனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த துருவ நட்சத்திரம் படத்தின் பெரும்பாலான பகுதிகள் துருக்கி நாட்டில் நடைபெற்று வந்தது. இதில் விக்ரம், ராதிகா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட நிலையில், விக்ரமின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து விடைபெற்றுள்ளார்.
துருக்கி, இஸ்தான்புல் உள்ளிட்ட நாடுகளில், மிக கடுமையான பகுதிகளில் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. அப்போது துருக்கி எல்லையில் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து படப்பிடிப்பை நடத்திய கெளதம் மேனன், விக்ரமை வைத்து எடுக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டாராம். இத்துடன், இப்படத்தில் விக்ரமின் போஷன் முழுவதும் முடிவடைந்துவிட்டதாகவும். கடிமையான இடங்களில், கடுமையான படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுத்த விக்ரமுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனன் நன்றி தெரிவித்துள்ளார்.
‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு முடிந்ததாலும், ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாலும், தனது அடுத்த படமான ‘சாமி 2’-வின் பணியில் விக்ரம் இறங்க உள்ளார். ஹரி இயக்கும் இப்படத்தில் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...