தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டிக்கு இன்று பிறந்தநாள். காமெடி வேடங்களில் நடிப்பதோடு கதையின் நாயகனாகவும் நடித்து வரும் அப்புக்குட்டி பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் அப்புக்குட்டி, தனது ரசிகர்களுக்கு உற்சாகமும், தைரியமும் அளிக்கும் வகையில், பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் அப்புக்குட்டி, “இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம். இது மனிதாபிமானத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும். இதுவரை 45 நாட்கள் கடந்து விட்டன .இதில் பல பலதரப்பட்ட மனிதர்களை அடையாளம் காண முடிகிறது.
மடி நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய இருள் இருக்கும் மனிதர்களையும், இருப்பதைப் பிரித்துக் கொடுக்கும் மனிதர்களையும் காண முடிகிறது. இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். அவர்கள் மத்தியில் இந்த நாட்டில் தன்னாலான உதவிகளை எத்தனையோ பேர் பெரிய மனதோடு செய்துகொண்டிருக்கிறார்கள்.
இருட்டாக இருக்கிறது என்று சொல்பவரை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்றுபவர் உயர்வானவர். பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவ நீளும் கரங்கள் புனிதமானவை என்பதையும் பார்க்க முடிகிறது.
இந்தச் சோதனையான காலத்தில் ஏதாவது உதவி செய்யுங்கள், முடிந்ததை உதவி செய்யுங்கள், சகமனிதனை மதியுங்கள். சிரமப்படுவோருக்குத் தன்னளவில் ஏதாவது செய்யுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். நானும் என்னளவில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை.
நிம்மதி திரும்பினால் போதும். போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இறைவன் மீட்டுக் கொண்டு வருவான் நல்ல முடிவு விரைவில் வரும். மன தைரியத்துடன் எதிர்கொள்வோம். மக்கள் தைரியமா இருந்தால் சந்தோஷம் கிடைக்கும்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வாழ்க விவசாயி’ அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மேலும், ‘வெட்டிப்பசங்க’, ‘பரமகுரு’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘பூம்பூம் காளை’, ‘வைரி’, ‘ரூட்டு’, ‘இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் அப்புக்குட்டி தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறாராம். இதன் மூலம், தெலுங்கு சினிமாவிலும் அப்புக்குட்டி அறிமுகமாகியிருக்கிறார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...