கொரோனா பிரச்சினை காரணமாக பல்வேறு துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அமல்படுத்தி வருவதால், சில நிறுவனங்களும், தொழில்களும் மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. அதே சமயம், தியேட்டர்கள் திறப்புக்கு பல மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டு வருகிறது.
வரும் மே 17 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், வரும் மே 25 ஆம் தேதி அல்ல்து ஜூன் 1 ஆம் தேதி, தியேட்டர்கள் திறக்கப்படலாம், என்று தமிழக முதல்வர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தியேட்டர் உரிமையாளர்கள் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டுள்ள ஆடியோவில், வரும் மே 25 அல்லது ஜூன் 1 ஆம் தேதி சினிமா தியேட்டர்கள் திறக்ககூடிய காலமாக இருக்கலாம், என்று முதல்வர் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சினிமா தியேட்டர்களின் திறப்பு பற்றிய தகவல் வெளியானது முதல் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...