இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. தமிழில் இதுவரை ஒளிபரப்பான மூன்று சீசன்களும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், நான்காவது சீசனுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல், தெலுங்கிலும் நான்காவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமான தமிழ் சினிமா நடிகையின் மீது ஆந்திரா போலீஸ் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்ஹ்ட ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீமுகி. இப்படத்திற்குப் பிறலு சில தெலுங்குப் படங்களில் நடித்த இவர், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்துக் கொண்டு பிரபலமானர்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீமுகி இரண்டு வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சையான கருத்தை கூறியதாக, தற்போது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும், வெங்கடராமா என்பவர் நடிகை ஸ்ரீமுகி மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் நடிகை ஸ்ரீமுகி மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், அவர் பேசிய வீடியோவை தற்போது ஆய்வு செய்வதோடு, விரைவில் ஸ்ரீமுகியிடமும் இது குறித்து விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...