தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அம்மணியின் கைவசம் தமிழ்ப் படங்கள் எதுவும் இல்லை. அதனால் தான் என்னவோ, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் நன்கொடை வழங்கியவர், தமிழ் சினிமா தொழிலாளர்களை கண்டுக்கொள்ளவில்லை.
தற்போடு கொரொனா ஊரடங்கினால் தனது இல்லத்தில் இருக்கும் தமன்னா, ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது 15 வயதில் நடிக்க வந்த போது தனக்கு ஏற்பட்ட ஷாக்கிங் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
அதாவது, தமன்னாவுக்கு 15 வயது இருக்கும் போது அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது நடிப்பில் பெரிய அனுபவம் இல்லாத அவர், யாரை அணுகி எப்படி படங்களில் ஒப்பந்தமாவது என்று கூட தெரியாமல் இருக்கும் போது, தன்னை தேடி வந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தாராம்.
அதே சமயம், திடீரென்று பட வாய்ப்பினால் அதிர்ச்சியான தமன்னா, சற்று சுதாரித்துக் கொண்டு அப்படத்தில் நடிக்க ஓகே சொன்னதோடு, நடித்தும் முடித்துவிட்டாராம். அவரது அந்த முதல் படம் ஓடவில்லை என்றாலும், அவருக்கு அது நல்ல அனுபவமாக இருந்ததாம்.
மேலும், அவரிடம் திரையுலகில் எந்த முன்னணி நட்சத்திரம் போல வலம் வர விரும்புகிறீர்கள்? என்று யாராவது கேட்டால், நடிகர் அஜித்தை போல வர வேண்டும், என்று பதில் அளிப்பாராம். அந்த அளவுக்கு அஜித்தின் எளிமை அவரை கவர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...