ஏப்ரம் மாதம் வெளியாகியிருக்க வேண்டிய விஜயின் ‘மாஸ்டர்’ கொரோனா பிரச்சினையினால் எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இருப்பினும், ஜூன் 1 ஆம் தேதிக்கு திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி கூறியிருப்பதாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அப்படி, ஜூன் மாதம் திரையரங்கங்கள் திறக்கப்பட்டால், ‘மாஸ்டர்’ படம் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கொரோனா அச்சத்தினால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மாஸாக இருக்கிறதாம். அவர் படத்தில் வந்த பிறகே படம் பெரிய படமானதாக, அப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் ‘மேயாத மான்’ மற்றும் ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்னவேலு தெரிவித்திருக்கிறார்.
மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், படம் குறித்து பெரிதாக பேசாமல் இருந்தாலும், இணை இயக்குநரான ரத்னகுமார், படம் குறித்த சில தகவல்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘மாஸ்டர்’ படம் குறித்து பேசிய ரத்னவேலு, “விஜய் சேதுபதி வந்த பிறகு தான் ‘மாஸ்டர்’ பெரிய படமானது. சாதாரண காட்சிகள் கூட ரசிக்கும்படியான காட்சிகளாக வந்தது. எந்த காட்சியை நீக்குவது, எந்த காட்சியை வைத்துக் கொள்வது என்பதில் பெரிய குழப்பமே ஏற்பட்டது. இருந்தாலும் படத்தின் நீளத்தை கருதி, சில காட்சிகளை மனமில்லாம வெட்டியிருக்கிறோம். இதுவரை பார்த்திராத விஜயை படத்தில் பார்க்கலாம். படம் எப்போது வெளியானாலும், அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவிடும் என்பது மட்டும் உறுதி.” என்று தெரிவித்துள்ளார்.
வில்லன் விஜய் சேதுபதி மாஸ் காட்டினால், ஹீரோ விஜய் என்ன செய்திருப்பாரோ!
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...