Latest News :

சினிமா தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டி!
Sunday May-10 2020

கொரோனா பாதிப்பால் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி சினிமா திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், கொரோனா அச்சத்தால் மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்களா? என்ற கேள்வியும் இருந்துள்ளது.

 

இதற்கிடையே, மிண்டும் திரையரங்கங்கள் திறக்கப்பட்டால், ரசிகர்களை திரையரங்கங்களுக்கு அழைக்கும் வகையில் படங்கள் வெளியானல் நிச்சயம் மக்கள் திரையரங்கங்களுக்கு வருவார்கள் என்ற பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில், இந்திய மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக கலந்திருக்கும் கிரிக்கெட் போட்டி, திரைக்காவியமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டி திரைக்காவியம் மூலம் இழந்த ரசிகர்களை திரையரங்கங்கள் மீண்டும் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.

 

கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு  கபீர் கான் இயக்கத்தில் உருவாகும் '83' திரைப்படம், ஆச்சரியத்தக்க முறையில், 1983ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடிய உண்மைச் சம்பவத்தை  மையமாகக் கொண்டது. உலகக் கோப்பைக்காண பயணத்தில் நடந்த பல சுவையான சம்பவங்களையும் உண்மைச் சம்பவங்களையும் விவரிக்கிறது இப்படம்.

 

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜூன் 20ஆம் தேதி வரை என்றும், அரை இறுதிச் சுற்று  22ஆம் தேதி எனவும்  அட்டவணைப்  படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதற்கான பயணச் சீட்டுகள் இந்தத் தேதிகளுக்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருந்தன.

 

போட்டிகளில் விளையாடிவிட்டு ஜூன் 20ஆம் தேதி இரவு நியூயார்க் செல்ல இந்திய அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தனர். அப்போதுதான் திருமண பந்தத்தில் நுழைந்த இவர்களில் சிலர் தங்கள் மனைவிகளுடன் இந்த வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர்.

 

இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுவரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்திய அணியினரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெகு சிறப்பாக விளையாடியதுடன், கிரிக்கெட் சரித்திரத்திலும் இடம் பெற்று விட்டது. 

 

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு, விளையாட்டுக்கான உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு இடமே இல்லை என்ற நிலைதான் காணப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாரா வகையில் இந்தியா வெகு சிறப்பாக விளையாடி, உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடித்தது. 

 

அணித் தலைவர் கபில் தேவ்வை அணியில் உள்ளவர்கள் செல்லமாக கபில் டெவில் என்று அழைத்ததையும், இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அனுபவத்தையும் வெண்திரையில் வெளியாகும் '83' திரைப்படத்தில் கண்டு மகிழலாம்.

 

கபீர்கான் பிலிம்ஸ் தயாரிக்கும்'83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் இணைந்து வழங்குகிறது. தீபிகா படுகோன், கபீர் கான், விஷ்ணுவர்தன் இந்தூரி, சஜீத் நாடியாவாலா, ஃபாண்டம் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் 83 பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.

 

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் '83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் பி.வி.ஆர். நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

 

1983 ஆம ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியா உலகக்கோப்பை வென்றதை கொண்டாடியவர்களும், அப்போதைய காலக்கட்டத்தில் அப்போட்டியை பார்க்காதவர்களும் கொண்டாடும் வகையில், விறுவிறுப்பான திரைக்காவியமாக உருவாகியிருக்கும் ‘83’ கிரிக்கெட் போட்டி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

6537

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery