திரைப்பட நடிகர், நடிகைகள் சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதும், அதனால் சர்ச்சையில் சிக்குவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான பூனம் பாண்டே, தனத் டிரைவருடன் சட்டத்தை மீறியதற்காக போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே, தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நடிகை பூனம் பாண்டே, ஊரடங்கு உத்தரவை மீறி தனது காரில் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் போலீஸாரிடம் பிடிபட்ட நடிகர் பூனம் பாண்டே மற்றும் அவரது கார் டிரைவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...