கொரோனா ஊரடங்கு உத்தரவால் பிரபலங்களின் திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. சிலர் திருமண தேதியை ஒத்தி வைக்கவும் செய்கிறார்கள்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளராஜ தில் ராஜூ, தேஜஸ்வினி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.
’ஃபிடா’, ‘நேனு லோக்கல்’, ‘யவடு’, ‘தில்’, ‘சதமானம் பவதி’, ‘ஜானு’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் தில் ராஜூவின் முதல் மனைவி அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், தேஜஸ்வினி என்ற பெண்ணை தில் ராஜு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...