Latest News :

’கபடதாரி’ படத்தின் டப்பிங் தொடங்கியது!
Tuesday May-12 2020

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது பெற்றதோடு, சினிமாவின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராக திகழும் தனஞ்செயன்,‘கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

 

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

 

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது.

 

இந்த நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று (மே 11) ‘கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள் பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியது. விரைவில் படத்தின் அனைத்து பின்னணி வேலைகளும் நிறைவுப்பெற்று படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

Kabadadaari movie dubbing

 

ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்துதிரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

 

ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார்.

 

Kabadadaari movie dubbing work

 

வணிகத் தலைமையை எஸ்.சரவணன் ஏற்க, நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை ஜி.தனஞ்செயன் கவனிக்கிறார்.

Related News

6546

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery