Latest News :

பஷீர் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணி தொடங்கியது
Tuesday May-12 2020

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு சில துறைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு, திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளான டப்பிங், ஒலி சேர்ப்பு, எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது.

 

இதனால், நேற்று முதல் சில திரைப்படங்களின் பின்னணி வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், ஜெ.எம்.பஷீர், தனது ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

 

நடிகரும், தயாரிப்பாளருமான ஜே.எம்.பஷீர், தனது டிரெண்ட்ஸ் சினிமா நிறுவனம் சார்பில், ‘குற்றாலம்’ என்ற படத்தை தயாரித்து இயக்குவதோடு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக மீனுகார்த்திகா, செளந்திரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, பவர் ஸ்டார், தாடி பாலாஜி, ஆனந்த் பாபு, ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ், ஏ.எம்.செளத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படக்குழு டப்பிங் பணிகளை மேற்கொள்ள தயாரான போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், டப்பிங் பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது.

 

தற்போது தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஜே.எம்.பஷீர் தனது ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார். படத்தின் ஹீரோவாக பஷீர், தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். 

 

தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சமூக இடைவெளியுடன் மேற்கொள்ளப்படும் ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணி, படத்தின் இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

Related News

6547

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery