80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாக்களிலும் முன்னணி கதாநாயகிகளகா வலம் வந்த ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பூ ஆகிய நான்கு பேரையும் முதல் முறையாக இணைத்ததோடு, மீண்டும் அவர்களை கதையின் நாயகிகளாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
ஜேம்ஸ் வசந்தன் கதை எழுதி, இசையமைத்து இயக்கும் படம் ‘ஒ அந்த நாட்கள்’. இப்படத்தின் கதையின் நாயகிகளாக ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய்.ஜி. மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்ப பாங்கான கதையை படைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன்.

ரொமாண்டிக் காமெடி கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். ஜான் பிரிட்டோ நடனம் அமைக்கிறார்.
மிராக்கிள் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜேம்ஸ் வசந்தன் தயாரிக்கவும் செய்யும் இப்படம் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் உருவாகிறது.
80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...