தமிழ் சினிமாவில் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் உதயநிதி, தற்போது திமுக-வின் முக்கிய பொருப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். அதனால், இனி காதல் மற்றும் காமெடி படங்கள் மட்டும் இன்றி சமூகத்திற்கு கருத்து சொல்லும் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கும் உதயநிதி, அதற்கான கதை தேர்வுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மு.மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் உதயந்தி, மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம், நாட்டின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசுவதோடு, அதற்கான தீர்வு சொல்லும் படமாகவும் இருக்கும் என்கிறார்கள்.
இதற்காக, பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சனுடன் ஆலோசனை நடத்திய இயக்குநர் மகிழ்திருமேனி, அவர் சொன்ன தகவல்களை வைத்து தான் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறாராம்.
மொத்தத்தில், அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் உதயநிதி, திரைக்கதை அமைப்பதில் திறமையானவரான இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சன் ஆகியோர் இணைந்திருப்பதால், இப்படம் இந்திய அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் படமாக உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...