Latest News :

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக்...!
Wednesday May-13 2020

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் அண்ணாச்சி, தனது கடை விளம்பரப் படங்களில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததை தொடர்ந்து, திரைப்படம் ஒன்றிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘உல்லாசம்’ மற்றும் ‘விசில்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்களும், விளம்பரப் படங்கள் உலகில் முன்னணி இயக்குநர்களாக இருக்கும் இரட்டையர் இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் அப்படத்தை இயக்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

 

இப்படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இறுதியாக மும்பையை சேர்ந்த புதுமுக நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்தார்கள். இருந்தும், மற்றொரு நாயகியாக முன்னணி ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு சுமார் 40 சதவீதம் முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு அருள் அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

Director JD and Jerry

 

இது குறித்து இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி சமீபத்திய பேட்டியில் ”அருள் அண்ணாச்சிக்கு நடிக்க வேண்டும், என்ற ஆசை நெடுநாட்களாகவே இருந்தது. அவரும் எங்களிடம் அதை அடிக்கடி கூறுவார். ஆனால், எங்களுக்கு தான் அதில் நம்பிக்கை இல்லை. பிறகு சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரத்திற்காக நடிகரை தேடிக் கொண்டிருந்த போது, நானே நடிக்கிறேன், என்று அருள் அண்ணாச்சி கூறினார். அதில் அவர் முதலில் நடிக்கும் போது பெருஷாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு தொடர்ந்து பல விளம்பரங்களில் அவர் நடிக்கும் போது அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை வந்தது. அதன் பிறகு தான் படத்தை தொடங்கினோம். படம் மாஸாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படத்தின் ஃபஸ் லுக் மற்றும் தலைப்பை வெளியிட இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

Related News

6556

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery