கொரோனா பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த சினிமா துறை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் அனுமதியை தொடர்ந்து மெல்ல மெல்ல தலைதூக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், கடந்த 11 ஆம் தேதி முதல் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் தேசிங்கு எழுதி இயக்கி தயாரிக்கும் ‘வைரி’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. பிரபல பாடகர் அந்தோணி தாஸ், இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் பாடல்கள் உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும், இசையமைப்பாளர்கள் டி.இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், ஹிப் ஹாப் தமிழா ஆதி, டிஜே நியூஸ்லியா (NUCLEYA) ஆகியோர் ‘வைரி’ படத்தின் பாடல்களை இன்று வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் புரோமோஷன் பாடலான, “வாட் ஆர் யு டாக்கிங் லேடி..” என்ற வீடியோ பாடல் இணையத்தில் 3.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் நிலையில், படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...