தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் இறுதியாக ஒளிபரப்பான மூன்றாவது சீசன், மிகப்பெரிய அளவில் நடைபெற்றதோடு, மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. இதனால், தொடர்ந்து தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் சிறந்த ஜோடி என்று மக்களால் வரவேற்கப்பட்ட ஜோடி என்றால் கவின் - லொஸ்லியா ஜோடி தான். இவர்களது காதல் மற்றும் கண்ணீர் காட்சிகளை சிலர், நாடகம் என்று விமர்சித்தாலும், இவர்களுக்காகவே பிக் பாஸ் சீசன் 3 மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால், அது மிகையாகாது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது காதலர்களாக இருந்த இவர்கள் போட்டி முடிந்த பிறகு தங்களது காதலை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் மற்றும் லொஸ்லியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதோடு, இவர்களா அது! என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். கவினிடம் காதல் பற்றி கேட்டால், தனக்கு நிறைய கடமைகள் இருக்கிறது. அவை முடிந்தால் தான் தன்னை பற்றி யோசிப்பேன், என்றுகிறார். லொஸ்லியாவோ காதல் பற்றி கேட்பார்கள், என்பதற்காக பேட்டியே கொடுப்பதில்லை.
மொத்தத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக இருந்த கவின், லொஸ்லியா, தற்போது தங்களுக்குள் எந்தவித உறவையும் வைத்துக் கொள்ளவில்லை என்ற நிலையில், அவர்களுக்கு இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கவின் தனது சமூக வலைதளத்தில், கண்ணாடி முன்பு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ”எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கவினின் இந்த பதிவுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த லொஸ்லியா, கண்ணாடி முன்பு எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ”வாழ்க்கை உங்களுக்கு எதாவது கற்பிக்க நினைக்கிறது. அதனால் உங்களை கண்ணாடியில் பார்த்து அதை சரி செய்துக் கொள்ள முயற்சியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
லொஸ்லியாவின் இந்த பதிலால், கவினுடன் அவருக்கு பெரிய மோதல் நிகழ்ந்திருப்பது தெரிகிறது. அதேபோல், பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியாவிடன் காதலை சொல்லி சுற்றியவர் தற்போது அவரை கழட்டிவிடும் விதத்தில் நடந்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
இது உண்மையா அல்லது, இந்த பதிவுகளுக்கு பின்னணியில் வேறு எதாவது இருக்கிறதா, என்பது கவின் மற்றும் லொஸ்லியா சொன்னால் தான் தெரிய வரும்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...