அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பணிகளும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விஜய் இன்று பார்சிலோனா சென்றுவிட்டார். படம் வெளியாவதற்கு முன்பாக மீண்டும் சென்னை திரும்பும் அவர், ஜனவரி மாதம் முதல் தனது 62 வது படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தில் டீசர் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், டீசர் ரிலீஸ் குறித்த பிரத்யேக போஸ்டர் ஒன்று இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஜல்லிக்கட்டு காளையுடன் விஜய் மற்றும் அவரது மனைவி வேடத்தில் நடித்துள்ள நித்யா மேனன், அவர்களது மகன் ஆகியோர் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
’மெர்சல்’ படத்தின் இந்த டீசர் ரிலீஸ் போஸ்டர், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...