தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த மீனா, திருமணத்திற்கு பிறகு அண்ணி, அக்கா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருவதோடு, மலையாளப் படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் ‘அண்ணாத்தே’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருபவர், வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
ரஜினி, கமல், மோகன்லால், சிரஞ்சீவி, மம்மூட்டி. நாகர்ஜுனா உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி ஹீரோக்கள் அனைவரும் ஜோடியாக நடித்திருக்கும் மீனா, அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித் உள்ளிட்டவர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், விஜயுடன் இதுவரை அவர் நடிக்கவில்லை. ‘ஷாஜகான்’ படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு விஜயுடன் சேர்ந்து நடனம் ஆடி இருக்கிறார்.
விஜயுடன் சுமார் நான்கு முறை நடிக்க வாய்ப்பு வந்தும், தேதி இல்லாமல் அதை மீனா நிராகரித்து விட்டாராம். இது குறித்து தற்போது விஜய் அவரை எங்கு பார்த்தாலும் சொல்வாராம். ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் போது, “என்னை உங்களுக்கு பிடிக்கல, அஜித்தை தான் பிடிக்கும் அதனால தானே என் கூட நடிக்கல” என்று விஜய் மீனாவிடம் விளையாட்டாக கேட்பாராம்.
அத்துடன், தெறி படத்தில் மீனாவின் மகள் நடிக்கும் போது, மீனா படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் வருவாராம். அப்போது அவரை பார்க்கும் விஜய், என் கூட நடிக்க அழைத்த போது, தேதி இல்லாமல் பிஸியாக இருந்தீங்க, இப்போ ஃபிரீயா இருக்கீங்களே, என்றும் கூறினாராம்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்போது விஜயுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று மீனாவிடம் கேட்டதற்கு, “நிச்சயம் நடிப்பேன். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த கேள்வியை முதலில் விஜயிடம் கேளுங்கள்” என்று கூறினார்.
தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கும் மீனா, மீண்டும் தமிழ்ப் படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...