Latest News :

விஜய், அஜித் பற்றி சுசித்ரா வெளியிட்ட தகவல்! - மீண்டும் உருவான சர்ச்சை
Friday May-15 2020

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான சுசித்ரா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அந்தரங்க தகவல் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், சுச்சி லீக் என்ற பெயரில் தொடர்ந்து வெளியான இந்த அந்தரங்க தகவல்களால் கோலிவுட்டே கலக்கம் அடைந்த நிலையில், அது சில மர்ம நபர்களால் செய்யப்பட்டது, என்று சுசித்ரா தரப்பினர் விளக்கம் அளித்தனர்.

 

பிறகு வெளிநாட்டில் ஒரு வருடம் தங்கியிருந்த சுசித்ரா, தற்போது மீண்டும் சென்னைக்கு வந்திருப்பதோடு, நார்மலான வாழ்க்கைக்கு திரும்பியுள்ள, சுசித்ராவின் சமீபத்திய பேட்டி ஒன்று புது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

தற்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் சுசித்ரா, தனது பாடல் அனுபவங்கள் மற்றும் முன்னணி நடிகர்களுக்காக தான் பாடிய ஹிட் பாடல்கள் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில், விஜய் மற்றும் அஜித் குறித்து பேசுகையில், விஜய் பட பாடல்களிலேயே ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “ஒரு சின்னத்தாமரை...” என்ற பாடல் தான் அஜித்துக்கு ரொம்ப பிடித்த பாடல், என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

 

மேலும், அப்பாடலை கேட்ட அஜித், இது போன்ற காதல் பாடல்கள் விஜய் பயலுக்கு தான் அமையுது, எனக்கு அமைய மாட்டேங்குது, என்றும் கூறினார்.

 

இந்த நிலையில், நேரில் அனைவரிடமும் மரியாதையாக பேசும் அஜித், பின்னாடி இப்படி பயல், என்று மரியாதை இல்லாமல் பேசுவதா, என்று சில நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருவதோடு, அஜித் இப்படி பேசக்கூடாது, என்று விஜய் ரசிகர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

அஜித் எதார்த்தமாக பயன்படுத்திய இந்த வார்த்தை குறித்து சுசித்ரா கூறியது, தற்போது பெரிய சர்ச்சையாகும் நிலை உருவாகியிருக்கிறது.

Related News

6564

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery