தமிழ் சினிமாவில் சுமார் 15 வருடங்களுக்கு மேலான முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, ஊரடங்கினால் வீட்டில் இருந்து வருகிறார். எங்கும் வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது கடினமாக இருந்தாலும், நடிக்காமல் இருப்பது அதைவிட கடினமாக இருக்கிறது, என்று சமீபத்தில் கூறிய திரிஷா, அவ்வபோது சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் பேசி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளம் மூலம் பதில் அளித்த திரிஷாவிடம், ரசிகர் ஒருவர், “உங்கள் பார்வையில் இந்திய சினிமாவின் சிறந்த 3 நடிகர்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த திரிஷா, கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான் ஆகிய மூவரும் தான் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்கள், என்று கூறினார்.
திரிஷாவின் இந்த பதிலால் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் பெரும் கோபமடைந்திருக்கிறார்கள். திரிஷா அஜித், விஜய், கமல், ரஜினி என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், அவர்களை சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யாதது, அவர்களது ரசிகர்களை கோபப்பட வைத்தாலும், திரிஷாவின் தேர்வில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...