சீரியல் உலகில் கள்ளக்காதல் விவகாரங்களும், விவாகரத்து விவகாரங்களும் அதிகரித்து வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை மேக்னாவின் விவாகரத்துக்கு பின்னணியிலும் கள்ளக்காதல் விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’தெய்வம் தந்த வீடு’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் மேக்னா. மலையாள நடிகையான இவர், பல மலையாள டிவி நிகழ்ச்சிகளுளிலும், தொடர்களிலும் நடித்திருக்கிறார். ‘கயல்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் தற்போது சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேக்னாவுக்கு கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் டான் டோனி என்பவருடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த மேக்னா, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் பெற்றார்.
தற்போது சென்னையில் செட்டிலாகி தமிழ் சீரியல்களில் நடித்து வரும் மேக்னா, தனது கணவரை விவாகரத்து செய்ய, சீரியல் நடிகருடன் அவருக்கு இருந்த தொடர்பு தான் காரணம், என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னணி மாத இதழின் இணையதளத்தில், ”’பொன்மகள் வந்தாள்’ விக்கி – மேக்னா நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா?” என்ற தலைப்பில், செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி வெளியாகும் போது மேக்னா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை.
அதே சமயம், அவருடன் இணைத்து பேசப்பட்ட சீரியல் நடிகர் விக்கி, தனது மனைவியான நடிகை ஹரிப்பிரியாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். தற்போது மேக்னா விவாகரத்து பெற்ற நிலையில், விக்கியும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது.
‘பொன்மகள் வந்தாள்’ தொடர் முடிந்து விட்டாலும், அதில் நடித்த ஜோடிகளான மேக்னா, விக்கி-யின் தொடர்பு இன்னும் வலுபெற இருப்பதாகவே கூறப்படுகிறது. மொத்தத்தில், விக்கி தனது மனைவி ஹரிபிரியாவை பிரிந்ததற்கும், மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்ததற்கும், தங்களுக்கு இடையே ஏற்பட்ட உறவு தான் காரணம், என்று தமிழ் சீரியல் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...