தொடர் வெற்றி நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி, தற்போது மாஸ் மற்றும் பெரிய பட்ஜெட் பட ஹீரோவாக உருவெடுத்திருந்தாலும், இப்போதும் கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் நடிக்க தயாராகத்தான் இருக்கிறார்.
அந்த வகையில், மாஸ் ஹீரோவாக உள்ள விஜய் சேதுபதி, வித்தியாசமான எடக்கு மடக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘எடக்கு’.
யாரும் எதிர்ப்பார்க்காத வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை எஸ்.சிவன் இயக்க, நிமோ புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பாலு தயாரித்திருக்கிறார்.
ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், படம் ஆரம்பம் முதல் முடியும் வரை சுவாரஸ்யத்தோடு நகரும், என்று கூறிய தயாரிப்பாளர் கே.பாலு, விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாகவும் இப்படம் இருக்கும், என்று தெரிவித்தார்.
இப்படத்தில் அமைந்துள்ள சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் விதத்தில், தவசி ராஜ் வடிவமைத்துள்ளாராம்.
சேலம், தர்மபுரி, பெங்களூர் நெடுஞ்சாலைகளிலும், அதை சுற்றியுள்ள ஊர்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள ‘எடக்கு’ விரைவில் திரைக்கு வர உள்ளது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...