தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். அதே சமயம், சினிமா நடிகைகளுக்கு இணையாக சர்ச்சைகளிலும் சிக்குகிறார்கள். அந்த வகையில், முன்னணி தொகுப்பாளினியான டிடி, திருமண விவாகரத்திற்குப் பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனது வேலையில் பிஸியாக இருக்கிறார்.
தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருபவர், ஊரட்ங்கினால் வீட்டில் இருக்கிறார். அவ்வபோது தனது ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பேசும் டிடி, ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். இது பெரும்பாலான கேள்விகள் அவரது திருமணம் பற்றியதாகவே இருக்கிறது. சிலர், “உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?” என்று கூட கேள்வி கேட்கிறார்கள். ஆனால், அனைத்து கேள்விகளுக்கும் சிரித்த முகத்தோடு பதில் அளிக்கும் டிடி, “கல்யாணம் ஆகிவிட்டதா?” என்ற கேள்விக்கு, கல்யாணம் ஆகவில்லை, என்றே பதிலளிக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் சமூக வலைதளம் ரசிகர்களிடம் டிடி உரையாற்றிய போது, ஒருவர், “அக்கா, உங்களை ரொம்ப பிடிக்கும், என்னை திருமணம் செய்துக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார். அக்கா, என்று கூறிவிட்டு திருமணம் செய்துக் கொள்கிறீர்களா? என்று கேட்ட அந்த முட்டாள்த்தனமான நபரின் கேள்வியை பார்த்து டிடி சிரித்ததோடு, “நீங்க என்னை இப்படி கூப்பிட்ட பிறகு உங்களை எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும்?, இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி” என்று பதில் அளித்தார்.
டிடி-யை அக்காவாக ஏற்றுக்கொண்ட அந்த தம்பிக்கும் இருக்கும் திருமண ஆசையை அறிந்த நெட்டிசன்கள், அந்த முட்டாள் தம்பியை, கமெண்ட்டுகள் மூலம் கலாய்த்து விட்டார்கள்.
will u marry me akka va . . adei . . 😂 pic.twitter.com/ob5ooxsotB
— Unknown (@Mysteri13472103) May 15, 2020
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...