கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு சுமார் 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், தற்போது சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திரைப்படங்களுக்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பல திரைப்படங்களின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பின்னணி வேலைகள் நடைபெற தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், வரும் மே 17 ஆம் தேதிக்குப் பிறகு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்குவது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சினிமா திரையரங்கங்கள் வரும் ஜூன் 1 ஆம் தேதி திறக்க வாய்ப்பு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...