Latest News :

கணவருடன் சேர்ந்து சாராயம் காசிய சீரியல் நடிகை கைது!
Saturday May-16 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்து நீடித்து வருவதோடு, நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தமிழகம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த சீரியல் நடிகை மஞ்சு சீனி, என்பவர் தனது வீட்டில் கணவருடன் சேர்ந்து சாராயம் காசி, போலீசில் பிடிபட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், அங்கு சிலர் கள்ளச்சாரம் காசி விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க கேரள காவல் துறை தனிப்படை அமைத்திருக்கும் நிலையில், சீரியல் நடிகை மஞ்சு சீனி, தனது வீட்டில் கள்ளச்சாரம் காசி விற்பனை செய்யும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, சுமார் 75 லிட்டர் சாராயம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Serial Actress Manju Seeni

 

ஊரடங்கினால் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் இல்லாததால், வருவாய் இன்றி கஷ்ட்டப்பட்டதனால் தான் சாராம் காசி விற்பனை செய்ததாக நடிக்கை மஞ்சு சீனி தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து சாராயம் காசிய அவரது கணவர், அவருக்கு 4 வது கணவர் என்றும், அவர் மீது கொலை வழக்குகள் இருப்பதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

6575

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery